கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டார்.  நேற்று முழுவதும் அலிகான் துக்ளக்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.  சில தினங்களுக்கு முன் கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில்  மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், செயது சாகி, மொஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.