இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் U, U/A, A என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் இனி 5 பிரிவுகளாக வழங்கப்பட இருக்கிறது.

அதாவது திரைப்பட தணிக்கை சான்றிதழ்களை 5 வகைகளாக பிரித்து வழங்கும் புதிய ஒளிப்பதிவு சட்ட மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சட்டம் வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும் இந்த புதிய சட்டத்தின் படி திரைப்படத் தணிக்கை சான்றிதழ்கள் இனி U, U/A 7+, U/A 13+, U/A 16+, A என 5 பிரிவுகளில் வழங்கப்படும்.