
தமிழக அரசு தற்போது நில அபகரிப்பு தொடர்பாக ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி போலியான ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள் மற்றும் காலியான அரசு நிலையங்களை அபகரிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களை கண்டறிய வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலியான ஆவணங்கள் மூலம் இலகத்தை அபகரித்தவர்களிடமிருந்து உடனடியாக நிலத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.