இந்திய கால்பந்து அணி கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு FIFA தரவரிசையில் மிகக் குறைந்த இடத்திற்கு சென்றுள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகு இந்த தரவரிசை பட்டியலில் குறைந்துள்ளது.

கடந்த ஜூன் 4ஆம் தேதி தாய்லாந்து- இந்தியா கால்பந்து போட்டியில் 0-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. அதைத்தொடர்ந்து நடந்த ஆசிய கோப்பை தகுதி சுற்றில் ஹாங்காங் இடம் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

அந்த முடிவுகளைக் கொண்டு இந்தியா FIFA தரவரிசையில் 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசியாக இந்திய கால்பந்த அணி கடந்த 2016 ஆம் ஆண்டு FIFA தரவரிசையில் 135 வது இடத்தில் கீழே தள்ளப்பட்டது.

ஆனால் இந்திய அணி எல்லா நேரத்திலும் சிறந்த தரவரிசை நிலையான 94 இல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய கால்பந்து  அணி வரும் 2027 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தகுதி பெறும் நம்பிக்கையை இழந்து வருகிறது.

இதனிடையில் நடப்பு உலக சாம்பியன் ஆன அர்ஜென்டினா 210 நாடுகளில் FIFA தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ்,  இங்கிலாந்து, பிரேசில், போச்சுகல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் குரேஷியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்து உள்ளன.