பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது. இதில் விசேஷம் என்னவென்றால் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  முதல் முறையாக அவர் உரை ஆற்றுகின்றார்.

பொதுவாக குடியரசுத் தலைவருடைய உரை என்பது அரசின் உடைய பார்வையை பிரதிபலிப்பாகவும்,  அரசினுடைய கொள்கை முடிவுகள்,  அரசு என்ன மாதிரியான திட்டங்களை,  சட்டங்களை கொண்டு வர நினைக்கிறது, அதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு நேரடியாக தெரிவிக்கின்ற வகையிலே  அமைந்திருக்கும்.

இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மன்றத்திலே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  அவர்கள் உரையாற்றுவார்கள். சுமார் ஒரு மணி அல்லது 1:30 மணி நேரம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வருகை தந்த குடியரசு தலைவரை பிரதமர், சபாநாயகர் வரவேற்றனர்.சற்றுமுன் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற தொடங்கினார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையில்,

இந்தியாவில் சுமார் 90,000 ஸ்டார்டப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன; உலக அளவில் விமானப்போக்குவரத்தில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. பசுமை எரிசக்தியில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது; 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசு தொழில்முனைவோருக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது; நமது இளைஞர்கள் தங்கள் புதுமையின் ஆற்றலை உலகுக்குக் காட்டுகிறார்கள். நிலையான அச்சம் இல்லாத முடிவெடுக்கக்கூடிய அரசு இந்தியாவில் உள்ளது. அது மிகப் பெரிய கனவுகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு பணியாற்றி வருகிறது.