
இந்தியாவில் உள்ள மக்கள் பலரும் தற்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். அதனால் அவர்களின் வசதிக்காக வங்கிகளும் பல்வேறு முதலீடு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதில் பிக்சட் டெபாசிட் மற்றும் நேஷனல் சேவிங்ஸ் செர்டிபிகேட் திட்டங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. முன்னணி பொதுத்துறை வங்கியான sbi வங்கியின் மக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றது.
இந்த திட்டத்தின் உதிர்வு காலத்தை பொருத்து 3 சதவீதம் முதல் 6.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். கூடுதலாக 400 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட சிறப்பு திட்ட மூலம் 7.10 சதவீதம் வட்டி கிடைக்கின்றது. அதனைப் போலவே எச்டிஎப்சி வங்கியில் 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூன்று சதவீத முதல் 7 புள்ளி 25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. ஐ சி ஐ சி ஐ வங்கியில் 7.10 சதவீதம் பட்டி வழங்கப்படுகின்றது.
அடுத்ததாக அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக நேஷனல் சேவிங் சர்டிபிகேட் திட்டம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 7.7 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் வழங்கக்கூடிய பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வட்டி விகிதத்தை ஒருவர் மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை பெற முடியும். ஆனால் நேஷனல் சேவிங் சர்டிபிகேட் திட்டத்தில் அஞ்சல் அலுவலக திட்டத்தின் விதிகளின்படி வட்டி ஆண்டு அடிப்படையில் கூட்டப்படுகின்றது.