தமிழகத்தில் கடந்த மாதம் பத்திரப்பதிவு கட்டணமானது உயர்த்தப்பட்டது. இதனால் செட்டில்மெண்ட் பத்திர பதிவு செய்வதற்கு பத்தாயிரம் செலுத்த வேண்டிய நிலையானது ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒப்பந்த பதிவுக்கு மூன்று சதவீதம் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பொது அதிகார பதிவுக்கு ஒரு சதவீத கட்டணமும் வசூலிக்க ப்பட்டு வருகிறது .இந்த பத்திரப்பதிவு கட்டண உயர்வுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. பத்திரப்பதிவு துறையில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சமாளிப்பதற்கு கட்டணம் உயர்வு கட்டாயம் அவசியம் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில அரசு பத்திரப்பதிவு கட்டணத்தில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது l. அதாவது மாநிலத்தில் தங்களுடைய ரத்த சொந்த உறவு முறைக்கு சொத்தை மாற்றினால் 5000 ரூபாய் பதிவு கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்று அறிவித்துள்ளது எத்தனை லட்சம் மதிப்புள்ள சொத்தை மாற்றினாலும் அதற்கு கட்டணம் 5000 மட்டுமே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது மக்கள் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளதால் மேலும் நீடிக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.