இந்தியாவில் உள்ள வங்கிகள் ஒவ்வொரு மாதமும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றன. அதன்படி ஆக்சிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டிஎப்சி வங்கி மற்றும் இண்டஸ் இந்த் வங்கி ஆகிய வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

அதன்படி முதலில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆண்டுக்கு 3.5 முதல் 7.25% வரை பொதுமக்களுக்கு வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு நான்கு முதல் 7. 25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அடுத்ததாக இண்டஸ் இந்த் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 3.50 முதல் 7.75 சதவீதம் வரையும் , மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 4 முதல் 8.25 சதவீதம் வரையும் உயர்த்தியுள்ளது.

அடுத்ததாக hdfc வங்கி குடிமக்களுக்கு 4.25 சதவீத முதல் 7.40 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டியும் வழங்குகின்றது. அடுத்ததாக ஆக்சிஸ் வங்கி ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரையிலான பிக்சர் டெபாசிட் திட்டத்திற்கு பொதுமக்களுக்கு 3.50 முதல் 7.20 சதவீதம் வரையும், 17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கான குறைவான தவணை காலத்திற்கு 10 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.