
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டையில் நிலேஷ் (21) மற்றும் அவரது தாயாரும் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களைப் பிரிந்து சென்றுள்ளார். இவரது தாய் மனநல பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நிலேஷ்க்கும் அவரது தாய்க்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த தகராறு முற்றிய நிலையில் நிலேஷ் அவரது தாயை கொன்றுள்ளார். அதன்பின் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது தாயுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அத்துடன் “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா”, நான் உங்களை கொலை செய்து விட்டேன், மிஸ் யூ என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கம் பக்கதினார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி விரைந்து வந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அவர் தாயின் சடலத்தின் முன்பு உட்கார்ந்து இருந்தார். அதன் பின்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
பின்பு காவத்துறையினர் தாயாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்பு நிலேஷின் தந்தையிடம் உடலை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர். ஆனால் அவர் வாங்கவில்லை என்பதால் காவல்துறையினரே அந்த பெண்ணிற்கு இறுதி சடங்குகள் செய்தனர்.