மே 2007 இல் மெக்சிகோவில் ஒரு விவசாயியால் ஒரு குழந்தை ஏலியன் உயிருடன் இருப்பதை மெக்சிகோ தொலைக்காட்சி வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதன் மேல் இருக்கும் பயத்தினால் அந்த விவசாயி அந்த ஏலியனை தண்ணீரில் மூழ்க வைத்திருந்தார் என கூறப்படுகிறது. அதனை கண்டறிந்த மெக்சிகன் விவசாயி அதை நீருக்குள் மணி கணக்கில் வைத்திருக்க வேண்டியதாயிற்று என்று கூறினார் எனவும் சொல்லப்படுகிறது.

சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் பற்றிய தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது என்னவென்றால், இது மனிதர்களுக்கு ஒத்த சில மூட்டுகளை கொண்டிருந்ததாலும் அதன் எலும்பு கூடுகள் பல்லியின் குணாதிசயங்களை கொண்டிருப்பதை சோதனைகள் வெளிப்படுத்தியன. மேலும் அதன் பற்களும் மனிதர்களைப் போல வேர்கள் இல்லை என்று கூறியுள்ளார்களாம்.

மேலும் அந்த உயிரினம் மிகவும் புத்திசாலி என கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கை ஒன்றின்படி உயிரினம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் அடிக்கடி யூஎப்ஓ அதாவது ஏலியனின் பறக்கும் தட்டு குறித்த அறிக்கைகள் உள்ளனவாம். இதனால் வேற்றுகிரக வாசிகள் வேண்டுமென்றே விட்டு சென்றிருக்கலாம் என விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்கும் அனைவரும் வியப்பில் அழ்ந்துள்ளனர்.