லியோ படத்திற்கான ப்ரமோஷன் பணிகளை தனியாளாக மேற்கொண்டு வரும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு இணையத்தில் அவரது ரசிகர்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் அக்டோபர் 19ல் வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது.  இந்நிலையில் படம் வெளியாவதற்கு  முன்பாக எந்த ஒரு நேர்காணல் மற்றும்  ஈவென்ட்களிலும் கலந்து கொள்ளாத படத்தின் தயாரிப்பாளர் லலித்  குமார் படம் வெளியான பிறகு நேர்காணல் ஒன்றில் தனது பங்களிப்பை உறுத்தி செய்துள்ளார். அதில், 

படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி நான்கு மணிக்கு ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஓன்றாக இத்திரைப்படம் ஜெயிலருக்கு போட்டியாக களம் இறங்கி உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.  ஜெயிலர் வசூலை இது  முறியடிக்கும் என நம்புகிறீர்களா ? அதே போல்,  தமிழ் திரைப்படத்தின் முதல் 1000 கோடி என்ற வசூலை லியோ திரைப்படம் தொடும் எனவும் கூறி வருகின்றனர் இது நடக்குமா ? என கேட்கப்பட்ட கேள்விக்கு  படத்தின் இயக்குனர் கண்டிப்பாக படம் 1000 கோடி தொடாது என தெரிவித்து அதற்கான காரணமாக ஹிந்தி திரை மார்க்கெட்டில் நாங்கள் பெரியதாக எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

  அதனால் அப்பகுதியிலிருந்து நாங்கள் பெரிதாக எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை என தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்ட தயாரிப்பு நிறுவனம், அதற்கான ப்ரோமோஷன்  பணிகளையும்,  அனைத்து மாநிலங்களிலும்  சரிவர செய்திருந்தால்,  கண்டிப்பாக படம் 1000 கோடியை வசூல் செய்திருக்கும்,  ஆனால் படக்குழு  சமூக வலைதளங்களின் வாயிலாக கூட எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 

மாறாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நேர்காணலில் தனது பங்களிப்பை உறுதி செய்து படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர் அவர் ஒருவர் தான்.  ஒரு வேளை இத்திரை திரைப்படம் ஆயிரம் கோடி என்ற வசூலை ஈட்டினால்  அந்த பெரும் சாதனைக்கு உரிய சொந்தக்காரர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டும் தான் என அவரது  ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.