ஸ்பெயின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தான் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக உருக்கமாக பேசியுள்ளார். கடந்த சில நாட்களாக ஓய்வு பெறுவதாக தகவல் பரவியது. அதனை அதிகாரப்பூர்வமாக ரபேல் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.