
தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை விஷாகா. இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது சினிமாவை விட்டு விலகி NFT தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதோடு உலக அளவில் பல Confrence-களில் கலந்துகொண்டு மேடைப் பேச்சாளராகவும் திகழ்கிறார்.
இந்நிலையில் நடிகை விஷாகா சிங் தற்போது மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாகவே தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறிவரும் விஷாகா தற்போது மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை விஷாகா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram