பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி. இவர் விஷ்ணுவர்தன் நடித்த ஹலோ டாடி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ள விஷ்ணுவர்தன் சில சீரியல்களை இயக்கியும் நடித்துள்ளார். இவர் பெங்களூர்வில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தன் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் நிதின் கோபியை அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நிதின் கோபி பரிதாபமாக உயரிழந்தார். தற்போது அவருக்கு 39 வயது ஆகும் நிலையில் அவருடைய மரணம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிதின் கோபியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.