
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய்தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு தற்போது வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக பிரபல விமர்சகர் உமர் சந்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் தெரிந்து அவருடைய மனைவி சங்கீதா விஜயிடம் பயங்கரமாக சண்டை போட்டதாகவும் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் விஜய்க்கும் தொடர்பு இருப்பதாகவும் கீர்த்திக்கு விஜய் காஸ்ட்லி காரை பரிசாக கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக உமர் சந்து பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் உமர் சந்துவை விளாசி வருகிறார்கள்.
BREAKING : Superstar #Vijay & his Wife Fought badly. Reason is #Vijay Secret Affair. She warned him Last time !!!
— Umair Sandhu (@UmairSandu) March 19, 2023