
சாங் ஜே ரிம் என்பவர் ஒரு தென் கொரிய நடிகர் மற்றும் மாடல் ஆவார். தென் கொரியாவில் உள்ள சியோல் பகுதியில் 1985 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் 2012ல்’மூன் எம்ப்ரஸிங் தி சன்’என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் நவம்பர் மாதம் 12ஆம் தேதி 2024இல் சீயோலில் உள்ள சியோன் டாங் மாவட்டத்தில் அவரது வீட்டில் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சாங் ஜே ரிம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் விசாரணை நடத்திய போது ஏ 4 சீட் அளவிலான 2 பக்க கடிதம் ஒன்று சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றர்.
இவரது இறுதி சடங்கு நவம்பர் மாதம் 14ஆம் தேதி “யூயிடோ செயின்ட் மேரியின் இறுதி சடங்கு மண்டபதில்” நடைபெற உள்ளது. சினிமாவில் மட்டுமல்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை சாங் ஜே ரிம் கொண்டுள்ளார். இவரது திடீர் இறப்பு ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.