இந்திய அரசு புதிதாக பாஸ்போர்ட் எடுப்பவர்கள் போலியான இணையதள முகவரி மூலம் ஏமாந்து விட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் அனைத்து வேலைகளையும் முடித்து விடலாம் என்ற நிலை வந்து விட்டது. இத்தகைய வளர்ச்சி பல நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டாலும் சிலர் அதனை ஏமாற்று வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு தொழில்நுட்பம் மூலம் ஏமாற்றுபவர்களிடம் பலர் தங்களின் அறியாமையால் சிக்கிக் கொள்கின்றனர். அவ்வகையில் வெளிநாட்டு செல்ல விரும்புபவர்கள் பாஸ்போர்ட் எடுக்கும் சமயத்தில் அதை ஆன்லைனில் பதிவு செய்ய முயற்சிக்கின்றனர்.

இது அவர்களின் வேலையை எளிமையாக்கும் ஆனால் புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்கு எது அதிகாரப்பூர்வ இணையதள முகவரி  என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து இந்திய அரசு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சிலர் பாஸ்போர்ட் எடுக்கும் இணையதளம் என்று போலியான இணையதள முகவரி மூலம் முகவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதோடு பாஸ்போர்ட் அலுவலகத்தில் அவர்களுக்கு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தது போன்றும் காட்டிவிடுகிறது.

சில இணையதள முகவரிகள் அதன் போலியான சேவைகளுக்கு கட்டணமும் வசூலிக்கிறது. இதில் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக இந்திய அரசு பாஸ்போர்ட் எடுக்க பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை தெரிவித்துள்ளதோடு, போலி இணையதள முகவரிகளையும் குறிப்பிட்டு இதனை உபயோகிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம்

www.passportindia.gov.in

போலியான இணையதளங்கள்

www.indiapassport.org

www.online-passportindia.com

www.passportindiaportal.in

www.passport-india.in

www.passport-seva.in

www.applypassport.org