மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து சிவசேனை கட்சி மற்றும் வில் அம்பு சின்னம் போன்றவற்றை ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உத்தவ் தாக்கரே தரப்பு மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரு தரப்பும் சிவசேனை கட்சிக்கும் சின்னத்திற்கும் உரிமை கோரிய நிலையில், இரு அணிகளிலும் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் பலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தற்போது சிவசேனை கட்சி மற்றும் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒதுக்கியுள்ளது.

இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் உத்த உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் சிவசேனை கட்சியின் சின்னத்தை பெற 2000 கோடிக்கு பேரம் நடந்துள்ளதாகவும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் விரைவில் அதை வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.