ஜார்ஜியாவில் சிறுவயதிலேயே ஒரு பெண் தத்தெடுக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு 40 வயது தற்போது ஆகும் நிலையில் அவர் வீட்டை சுத்தம் செய்யும்போது பிறந்த சான்றிதழை பார்த்துள்ளார். அப்போது அதில் தன்னுடைய பிறந்த தேதி தவறாக இருப்பதை உணர்ந்தார். அதன் பிறகு தான் அவர் தத்து கொடுக்கப்பட்டது தெரியவந்த நிலையில் பின்னர் தன் சொந்த பெற்றோரை தேட ஆரம்பித்தார். எதிர்பாராத விதமாக அவருடைய பேஸ்புக் நண்பர் தான் அவருடைய தந்தை என்பது பின்னர் தெரியவந்தது. மேலும் இதனை எப்படியோ அந்தப் பெண் கண்டுபிடித்த நிலையில் பின்னர் தன் தந்தையை அவர் அடைந்தார்.
அதாவது அந்த பெண்ணை வளர்த்த பெண்மணி இறந்த நிலையில் கிட்டத்தட்ட 4 வருடங்களாக தன் உண்மையான பெற்றோரை அவர் தேடிய நிலையில் கடத்தல் கும்பலால் தன் பெற்றோரிடமிருந்து தன்னை பிரித்து வேறு ஒருவரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்கள் பெற்றோர் இறந்து விட்டதாக கூறி வளர்த்து வந்துள்ளனர். அதன் பிறகு பேஸ்புக் நண்பர் தான் தந்தை என்று தெரிய வந்த நிலையில் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதன் முடிவில் இருவரும் உண்மையான அப்பா மகள் என்பது உறுதியானது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.