கடந்த 2 வருடங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே கொரோனா பாதிப்பால் தாய்-தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.4,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படுமென அவர் தெரிவித்து உள்ளார். இந்த தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது.