பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தது, கட்சியின் உட்கட்சி விவகாரங்களைப் பற்றி ஆலோசிக்க நடைபெற்றது என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இதனையடுத்து, சற்றுமுன் தனது X தளத்தில் அமித் ஷாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “மக்கள் நலனுக்காக தன்னாலான பணியை செய்த சமூக நீதியாளரும், வீர மரபின் அடையாளமாக விளங்கும் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் மனுவை அமித் ஷாவிடம் வழங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து,
தேச விடுதலைக்காக பாடுபட்ட
தெய்வத் திருமகனார் பசும்பொன்
ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான… pic.twitter.com/rexu2vDtz0— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 17, 2025
“>
இதன் மூலம், அந்த சந்திப்பு கட்சியில் நிலவும் பிரச்சனைகள் மட்டுமின்றி , முக்கியமான மக்கள் நல கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கத்தில் நடந்ததென்பதும் உறுதியாகியுள்ளது.
