ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின்(EPFO) சந்தாதாரர்கள் முந்தைய சாளரத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்யாத ஊதியதாரர்களுக்கு தற்போது மற்றொரு விருப்ப தெரிவை இபிஎப்ஓ வழங்கியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு(EPFO) அதன் அனைத்து மண்டல மற்றும் மண்டல அலுவலகங்களுக்கும் உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் விதத்தில் அறிவுறுத்தல்களை வழங்கியது.

அதாவது, EPFO இப்போது சந்தாதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூபாய்.15,000 எனும் வரம்புக்கு உட்பட்ட ஓய்வூதியத்திற்கு அப்பால் செல்ல அனுமதித்து உள்ளது. அதில் முதலாளிகள் உண்மையான அடிப்படை சம்பளத்தில் 8.33% ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்காக கழிக்கின்றனர். டெபாசிட் செய்யும் முறை ஓய்வூதியத்தை கணக்கிடுதல் குறித்த விபரங்கள் அடுத்தடுத்த சுற்றறிக்கைகளில் விவரிக்கப்படும் என EPFO தெரிவித்துள்ளது.

அதன்படி, பணியாளரும் முதலாளியும் ஒன்றாகப் பதிவுசெய்து அதிக மாதாந்திர அடிப்படைச் சம்பளத்தில் 8.33 சதவீதத்தை கழிக்க EPFO-ஐ கோரலாம். இதன் காரணமாக அவர்களின் பணி வாழ்க்கையில் ஓய்வூதியம் அதிகளவில் சேருவது உறுதிசெய்யப்படும். இந்த புது சுற்றறிக்கையின் வாயிலாக செப்டம்பர்-1 2014 அன்று (அ) அதற்கு பின் தொடர்ந்து சேவையில் இருக்கும் ஊழியர்களின் நிலுவையிலுள்ள வகையை EPFO உள்ளடக்கி இருக்கிறது.