இபிஎப்ஓ டிஜிட்டல் பாஸ்புக், பிஎப் இருப்பு, முதலாளி வழங்கிய பங்களிப்புகள் மற்றும் அவர்களின் PF கணக்கில் சம்பாதித்த வட்டி போன்றவற்றை கண்காணிப்பதில் பயன் உள்ளதாக இருக்கும். கூடுதலாக கடன்கள் (அ) பிற நிதிச்சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிஎப் பங்களிப்புகள் மற்றும் இருப்பு விபரங்களுக்கு ஆதாரமாகவும் இ-பாஸ்புக் பயன்படுத்தப்படலாம். பிஎப் கணக்கிற்கான இ-பாஸ்புக் இபிஎப்ஓ போர்ட்டலில் UAN எண்ணைப் பதிவுசெய்த ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தற்போது SMS வாயிலாக EPF பாஸ்புக் இருப்பை எப்படி சரிபார்க்கலாம் என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

எஸ்எம்எஸ் வாயிலாக EPF பாஸ்புக் இருப்பை சரிபார்க்க EPFO போர்ட்டலில் உங்களது மொபைல் எண்ணைப் பதிவு செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதன்பின் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து < EPFOHO UAN ENG > என டைப்செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். SMS அனுப்பிய பின் சிறிது காத்திருக்க வேண்டும். உங்கள் இறுதி PF பங்களிப்பின் விபரங்கள், இருப்பு விவரங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய KYC தகவல் போன்றவற்றை உள்ளடக்கிய SMS உடன் EPFO பதில் அளிக்கும்..