வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதமானது  குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகி  இருக்கிறது. நடப்பு 2023-24 நிதியாண்டில் EPFக்கு 8% வட்டி வழங்குவதற்கு EPFO மத்திய அறங்காவலர் குழு முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற சிபிடி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் பிஎஃப் கணக்கு நிலுவைகளுக்கு எட்டு சதவீதம் வட்டி விகிதத்தை செலுத்துவதற்கான பரிந்துரை மத்திய நிதி துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.