நாட்டில் அதிக வருங்கால வைப்புநிதி ஓய்வூதியங்களை கோருவதற்கான கூட்டு விருப்பங்களை சமர்பிக்க, ஜூன் 26-ம் தேதி வரை காலகெடு வழங்கியிருக்கிறது. எனினும் பல்வேறு முதலாளிகள் அவர்களின் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் செயல்முறைகளை எளிமைப்படுத்தவும் கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என்று பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) அணுகியுள்ளனர். ஒரு பணியாளரின் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தின் பரிவர்த்தனையை இச்செயல்முறை உள்ளடக்கி உள்ளதால் அந்த வேலையை சரியாக செய்ய வேண்டும். இதன் காரணமாக அதிக நேரம் தேவைப்படுகிறது.

ஆகவே தற்போது வழங்கப்பட்ட கால கெடுவை மேலும் நீடிக்கவேண்டும் என தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக EPFO-ன் மத்திய அறங்காவலர் குழுவில் முதலாளிகளின் பிரதிநிதி ஒருவர் கூறியதாவது, பணப்பரிவர்த்தனைகளை உள்ளடக்கி இருப்பதால் கூட்டு விருப்பங்களை அங்கீகரிக்கும் செயல்முறை மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும். இதனால் EPFO கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.