இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை சேர்ந்த ஊழியர்களுக்கு Employee deposit linked insurance என்ற திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஊழியர்கள் எந்தவித பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து EPFO ஊழியர்களும் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியும். ஊழியர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழந்து விட்டால் சட்டபூர்வமாக ஊழியரின் வாரிசுக்கு அதிகபட்சம் ஏழு லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

அதேசமயம் epfo உறுப்பினர் 12 தங்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக பணியில் இருந்தால் குறைந்தது 2.5 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும். இந்த இன்சூரன்ஸ் தொகையை குடும்பத்தாளர்கள் பெறுவதற்கு இ பி எஃப் ஓ ஊழியர்கள் பிஎப் கணக்கில் நாமினேஷன் பெயரை கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். இவ்வாறு சேர்க்கும் போது ஊழியர் உயிரிழக்கும் நேரத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். எனவே இ பி எஃப் ஓ ஊழியர்கள் பிஎப் கணக்கில் நாமினியை சேர்ப்பது நல்லது.