நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவாறு தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். தீப ஒளி என்று அழைக்கப்படும் இந்த திருநாள் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கிறது. இந்த நாளில் இனிப்புகள் மற்றும் பரிசுகளை மக்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். புதிய ஆடைகள், பரிசுகள் மற்றும் பட்டாசுகள் என தீபாவளி மகிழ்ச்சியாக இருக்கும். இது மறுபக்கம் ஆரோக்கியம் மற்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தக் கூடும்.

இந்த வருடம் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பு வழிமுறைகளுடன் நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். தீபாவளி பண்டிகையை சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் கொண்டாட முதலில் உங்கள் வீட்டை ஒளிரச் செய்ய அகல் விளக்குகள் அல்லது எல்இடி விளக்குகளை பயன்படுத்துங்கள். பண்டிகைக்கு எண்ணெயில் ஏற்றும் தீபத்தை வைப்பது நல்லது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய எல்இடி விளக்குகளை பயன்படுத்தலாம். மற்ற விளக்குகளுடன் ஒப்பிடும்போது இவை குறைந்த ஆற்றலை பயன்படுத்துவதால் மாசுபாடு குறைவாக இருக்கும்.

தீபாவளி திருநாளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆர்கானிக் பரிசுகளை வழங்குங்கள். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பரிசளிப்பதன் மூலமாக உள்ளூர் சந்தையை ஊக்குவிக்கலாம். இன்டோர் தாவரங்கள் மற்றும் பூக்களும் ஒரு நல்ல யோசனையாகும். மூங்கில் கூடை மற்றும் காகிதத்தால் செய்யப்பட்ட பைகள் அல்லது துணி பைகளை பயன்படுத்தி பரிசு பொருட்களை நீங்கள் மேலும் மெருகேற்றலாம்.

வண்ணமயமான ரங்கோலி வடிவமைப்புகள் இல்லாமல் தீபாவளி நிறைவடையும் என்பதால் செயற்கை மற்றும் தீங்கு விளைவிக்கும் வண்ணங்களை பயன்படுத்துவதற்கு பதில் வண்ணமயமான பூக்கள் அல்லது ஆர்கானிக் வண்ணங்களை பயன்படுத்தி வண்ண ரங்கோலி கோலங்களை போடலாம்.

வெளியில் இருந்து இனிப்புகளை வாங்குவதற்கு பதில் நீங்களே வீட்டில் இனிப்பு மற்றும் பலகாரங்களை தயார் செய்து உறவினர்களுக்கு வழங்கலாம்.

இயற்கையான பூக்கள், தாவரங்கள், களிமண் பொருட்கள் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றால் உங்கள் வீட்டை அலங்கரிக்கலாம்.