பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி விமான நிலையத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சென்றுள்ளார். “ஷங்காய்” மாநாடு இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கு ஒரு நாட்டின் பிரதமர் பங்கேற்பார். இதனால் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை அல்லது வெளியுறவுத்துறை மந்திரி கலந்துகொண்டு வருகின்றனர். இதேபோன்று,  இந்த ஆண்டும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாகிஸ்தான் மாநாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மந்திரி ஜெயசங்கரை அதிகாரிகள் அனைவரும் அன்பாக வரவேற்றனர். பாகிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் இடையே காஷ்மீர் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனை இருந்து வரும் நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி பாகிஸ்தானிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சென்ற வெளியுறவுத்துறை மந்திரியை அந்நாட்டின் பிரதமர் ஷாபாஷ் ஷெரிப் கைக்குலுக்கி உற்சாகமாக வரவேற்றார். மேலும் அவர் அளித்த அரசு சாராத இரவு விருந்தில் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.