இன்று (பிப்,.1) ஆம் தேதி காலை 11 மணிக்கு நாட்டின் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் சாமானிய மக்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தில் இருந்து நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் சில வேறுபட்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம். மேலும் இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்குமென சாமானிய மக்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.

அதன்படி  இம்முறை வருமான வரித் துறையில் பணி விதிப்பு என்ற பல வருடகால கோரிக்கை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து விவசாயிகள் பிஎம் கிசான் தொகையை அதிகரிக்கவும், கிரெடிட்கார்டு வரம்பை உயர்த்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. ppf-ல் அதிகபட்ச முதலீட்டு வரம்பை ரூபாய்.1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என நிதியமைச்சருக்கு நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.