டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய படம் “மாமனிதன்”. இந்த படத்தை மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் வருகிற ஏப்ரல் 20 முதல் 27 வரையிலான நாட்களில் திரையிட இருக்கின்றனர். இதற்காக அண்மையில் சீனு ராமசாமிக்கு ரஷ்யன் மையம் சார்பாக பாராட்டு விழா நடந்தது.

அதில் சீனு ராமசாமி பேசியதாவது “ரஷ்யா நாட்டில் மாமனிதன் படம் திரையிடப்பட இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் சினிமாவுக்கு வந்த நோக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறுகிறது. மாமனிதன் படம் தியேட்டரில் வெளியான போது வெறும் 20% பார்வையாளர்களை மட்டுமே பெற்றது. எனினும் ஆஹா ஓடிடியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என குறிப்பிடப்பட்டு உள்ளார். இனிமேல் நான் விஜய் சேதுபதி உடன் இணைய வாய்ப்பு இல்லை. 12 வருடங்களில் 4 திரைப்படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கி இருக்கிறேன். நான் இறந்தாலும் கூட இப்படங்கள் பேசும் என தெரிவித்து உள்ளார்.