தற்கால டிஜிட்டல் உலகில் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள நமக்கு பெரிதும் உதவுபவை எமோஜிக்கள். அந்த எமோஜிகளுக்கான தினம் தான் ஜூலை 17. புரியாத புதிர்களையும் புரிய வைக்கும், சொல்ல முடியாத வார்த்தைகளையும் வெளிப்படுத்தும், அடக்க முடியாத கோபத்தையும் எதிர் தரப்புக்கு பதிய வைக்கும் ஆற்றல் கொண்டதுதான் எமோஜி. இந்த எமோஜி முதலில் ஜப்பானை சேர்ந்த Shigetaka Kurita என்பவரால் 1998 ஆம் வருடம் பயன்படுத்தப்பட்டது.

சில காரணங்களால் எமோஜியை அவரால் தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை. ஆனால் மெல்ல மெல்ல எமோஜிக்கள் வளர்ந்து பரவி ஒவ்வொருவரது கைபேசியிலும் நிறைந்து விட்டது. பக்க பக்கமாக எழுதினாலும் புரிய வைக்க முடியாத விஷயத்தை ஒரு எமோஜி மூலம் புரிய வைக்க முடியும். நேரத்தை மிச்சப்படுத்த பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் எமோஜிக்கள் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.