ஏவிஎம் தயாரிப்பில் வெற்றிப்பட டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் வருடம் ரிலீசான திரைப்படம் எஜமான். நீண்ட தினங்களுக்கு பின் ஏவிஎம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அதோடு நெப்போலியன், நம்பியார், மனோரமா, ஐஸ்வர்யா, கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான எஜமான் படம் பார்த்துவிட்டு பெரிய ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்தை தற்போது ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த கடிதத்தில் “எஜமான் வானவராயன் போன்று ஆண் இருந்தால் சொல்லுங்கள், உடனே நான் கழுத்தை நீட்டுகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார். 1993 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகிய எஜமான் படம் ரிலீஸ் ஆகி 30 ஆண்டுகள் தாண்டியதை முன்னிட்டு இந்த கடிதத்தை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.