செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ED அதிகாரி கைது செய்யப்பட்டது கோடிக்கணக்கான ஊழல்களிலே ஒரு ஊழல். எல்லா துறையிலும் அது இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் என்று சொன்னாலும் கூட,  அல்லது வருமான வரி துறையாக இருந்தாலும்….  அல்லது தாசில்தார் அலுவலகமாக  இருந்தாலும்….

அல்லது கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்று சொன்னால் கூட,  500 ரூபாய்…  2000 ரூபாய் லஞ்சம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஒரு சில அதிகாரிகள் இருக்கிறார்கள். அதை கண்டுபிடித்து, கட்டுப்படுத்துவது தான் மாநில மத்திய அரசினுடைய கடமை. ஆகவே  எல்லாத்துறையிலும் ஒன்று இரண்டு கருப்பாடுகள் இருக்கும், அந்த கருப்பாடுகளிலே அதுவும் ஒன்று. ஆகவே ஒட்டுமொத்தமாக அமலாக்கத்துறையை நாம் குறை சொல்லி விட முடியாது.

மத்திய அரசினுடைய திட்டங்கள் எல்லாம் மாநில அரசினுடைய திட்டங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. மாநில அரசு தான் செய்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள்.  PDO  அலுவலகத்தில் இருந்து….. தாலுக்கா, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சி  தலைவர்கள் அலுவலகத்தில் இருந்து மத்திய அரசினுடைய அத்தனை திட்டங்களும் மாநில அரசு செய்வது போல செய்து கொண்டிருக்கிறார்கள்.

நான் சொன்ன 65 ஆயிரம் ரூபாய் கழிப்பிடத்திலிருந்து….. 3 லட்சம் ரூபாய் வீடு கட்டும் திட்டம் வரை…. 6000 ரூபாய் விவசாயிகளுக்கு செல்கின்ற திட்டத்திலிருந்து…. ஆம்புலன்ஸ் திட்டம் வரை,  70%   மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு செய்வது போல செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.