வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் இட்லி மாவு அரைக்கும் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு மின் கட்டணம் அதிகமாக வந்தது. இதனால் சிறு குறுந்தொழில் சான்று பெற்று மின் கட்டண விகித மின் இணைப்பை மாற்ற வலியுறுத்தி சிவா மேல்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது மின்வாரிய வணிக ஆய்வாளர் மதன் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து சிவா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவா கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மதனை கையும், களவுமாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மின்வாரிய பொறியாளர் ராமலிங்கம் மதனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.