இளம் வயதில் நமது எலும்புகளை காக்க உடலுக்கு நன்மைகளை தரும் உணவுகளை எடுத்துக்கொண்டு முதுமையில் வரும் எலும்பு தேய்மானம் முதல் எலும்பு பலவீனம் போன்ற நோய்கள் வராமல் நாம் நம் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் பச்சை காய்கறிகள், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த பச்சை காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, பீட்டா கேரோட்டின், போலேட், வைட்டமின் டி1, வைட்டமின் டி2, வைட்டமின் டி 3, டி4 மற்றும் டி 6 ஆகியவை உள்ளன.

நாம் தினமும் இந்த காய்கறிகளை உண்பதால் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பருப்பு வகைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. பால் பொருட்கள் தவிர இவற்றை அதிகம் உட்கொள்ளலாம். இதில் புரதம், நார்ச்சத்து ஆகியவற்றுடன் கால்சியம் கிடைக்கும். இவை நமது செரிமான அமைப்புக்கும் நல்லது. நமது ஆற்றலையும் அதிகமாக்கும். வைட்டமின் சி அதிகம் இருக்கும் ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய், ஸ்ட்ராபெரி, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம்.

வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் கொண்ட முட்டைக்கோஸ். காலிபிளவர், துளசி, கொத்தமல்லி ஆகியவை சாப்பிடலாம். பால், தயிர், பாலாடை கட்டி, முட்டை, ஓட்ஸ், இறைச்சி போன்ற புரத சத்து கொண்ட உணவுகளையும் உட்கொள்ளலாம். காளான், முட்டையின் மஞ்சள் கரு போன்றவை வைட்டமின் டி உள்ளடங்கிய உணவுப் பொருட்கள். பச்சை காய்கறிகள், பூசணி விதைகள், வாழைப்பழம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம். இப்படி சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்டு நமது உடலை பாதுகாப்பது நமது கடமையாகும்.