சென்னை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரான லிங்கேஸ்வரன் கைதிகளை அழைத்து செல்லும் வாகனத்தில் சென்றபோது மது அருந்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் லிங்கேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவருடன் இருந்த சக காவலர்கள் யாரேனும் மது அருந்தினார்களா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.