பாலிவுட் நடிகரான அஜாஸ் கானுடைய ஜோதேஷவரி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து அதிகாரிகள் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். கடந்த அக்டோபர் 8ம் தேதி அன்று அஜாஸ் கானின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுராஜ் கௌத் என்பவர் ஐரோப்பா நாட்டில் இருந்து 100 கிராம் மெஃபெடிரோன் போதை பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்த பார்சல்  அஜாஸ் கானின் அலுவலகத்தில் டெலிவரி செய்யப்பட்டது. இதுதொடர்ந்து அதிகாரிகள் சுராஜை கைது செய்தனர். அதன்பின் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அஜாஸ் கானின் மனைவி ஃபாலன் குலிவாலாவுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு உள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதோடு அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. இதை வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் ஜோதேஷவரி குடியிருப்பில் சோதனை செய்தனர். அதில் 130 கிராம் எடை கொண்ட மாரிஜுவானா மட்டும் இதர போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் பின் அதிகாரிகள் குலிவாலாவை கைது செய்தனர். இதுகுறித்து அவரது கணவனிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்க முயற்சித்தனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.