நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கும் மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமில்லாமல் செயல்படுத்துகிறோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன என்று கூறினார்.