ssc, ரயில்வே தேர்வு, வங்கித் தேர்வு போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாவட்டந்தோறும் 150 மாணவர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால், பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் tnskill.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன்  திட்டத்தின் கருப்பொருள் “உலகை வெல்லும் தமிழகம்” என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிய துடிக்கும் இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.