மேகதாது அணையை கட்டிய தீருவோம்னு கர்நாடக அரசு சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

அவ அதானே சொல்லுவான். நீங்க எல்லாம் சொல்லுங்க….  நீங்க நடுநிலையாளர்கள்னு  உங்களை வைத்து பேசுறேன். காங்கிரஸ் என்கிறவன் ஸ்டேட் பார்ட்டியா ? இல்லை ஆல் இந்தியா பார்ட்டியா ? நீ இறையாண்மை பேசுவ…  நீ இந்திய ஒருமைப்பாடு பேசுவ…  தேச ஒற்றுமை பேசுவ…  அப்புறம் நீ கர்நாடகா என்று வரும்போது ஏன் ஸ்டேட் பார்ட்டியா மாறுற ? எவ்வளவு வலிக்கும்னு பாருங்க ? 

எங்கடா இருக்கு இந்திய இறையாண்மை,  ஒருமைப்பாடு. என்னுடைய வளம் எல்லோருக்கும் பொதுவாய் இருக்குல்ல…  அணு உலையில் இருந்து தயாரிக்கும் மின்சாரம்… என்னுடைய அனல் மின்சாரம்….  என்எல்சியில் இருந்து…  பழுப்பு நிலக்கரியில் இருந்து தயாரிக்கும் மின்சாரம் பொது சொத்து. இந்தியாவின் உடமை.

சொத்தை கொடுத்தது என் தாத்தா செம்புலிங்க முதலியார்…. 500 ஏக்கரை எடுத்து கொடுத்துட்டு வந்துட்டான்…  பொது சொத்தாக்கிட்டு வந்துட்டான்…  நீ எடுத்து வச்சுக்கிட்டு,  299 பேர வேலைக்கு சேர்த்த…  ஒரு தமிழனை சேர்த்து இருக்கியா ? பதில் சொல்லுவியா  நீ..  கோபம் வரக்கூடாதுன்னா எப்படி? பேசுனா... ஆண்டி  இந்தியன் அப்பத்தா இந்தியன்னு சொல்லுவ…  உன் வளம் உனக்கு என்றால் ? என் வளம் எனக்கு தானே…

கர்நாடகா என்று வரும்போது பாரதிய ஜனதாவோ,  காங்கிரஸோ அது மாநில கட்சியா ? இந்திய கட்சியா ? அத மட்டும் சொல்லுங்க. மாநில கட்சியா மாறுகிறீர்கள் அல்லவா ? இரண்டு பேருமே 9000 கோடிக்கு அறிவிப்பு போட்டு இருக்காங்க. தேர்தல் அறிக்கையை நீங்க படிச்சு பார்க்கலாம். அவங்க தேர்தல் அறிக்கையில்… நாங்க ஆட்சிக்கு வந்தா 9000 கோடி செலவு பண்ணி  மேகதாதுல அணை கட்டுவோம் என்று..

நான் என்ன கேட்கிறேன்….  ஐயா ஸ்டாலின் கிட்ட… அவன் அவன் ஸ்டேட்டுக்கு உண்மையா இருக்கான்ல. நீங்க ஒரு கட்சி தலைவர் என்றால் எனக்கு பிரச்சனை கிடையாது. நீங்க  என் ஸ்டேட் சீப் மினிஸ்டர் யாரைக் கேட்டு நீங்க போய்…  எனக்கு தண்ணி தர மறுக்கிறவனுக்கு ஓட்டு கேட்டீங்க…  பதில் இருக்கா ?  உங்களுக்கு அந்த கோவம் வருதா ? இல்லையா ? ( செய்தியாளரை பார்த்து ) தம்பி வருதா இல்லையா ? யாரை கேட்டீங்க…. வருந்துனீங்களா ? வெரி சாரி. இதையேதான் மோடி சொன்னாரு. 50 நாளில் சொர்க்கத்தில் கொண்டு வைப்பேன் என சொல்லி பணம் செல்லாது என அறிவிச்சாரு.

ஒரு தேசத்தின் மக்கள் கிட்ட ஒரு வருத்தம்….  சாரி அது தப்பா நடந்துருச்சுன்னு. அந்த பெருந்தன்மை இல்லாதவன் நீ எதுக்கு லீடரா இருக்க ? நீ கேட்கணுமே… இப்ப கூட ஒரு வாய்ப்பு இருக்கு அவருக்கு…..  எனக்கு உரிய நதிநீரை பங்கிடலைன்னா…. பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு தொகுதி பங்கீடு இல்ல,  அப்படின்னு சொல்லுங்க பாப்போம் என தெரிவித்தார்.