
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சோழ மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தனது குடும்ப மரபு, தலைமைப் பொறுப்புகள், மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் குறித்து வரலாற்று அடிப்படையிலான விளக்கங்களுடன் உருக்கமாக பேசினார்.
“முன்னாள் தலைவராக்கப்பட்ட அந்த குழந்தைதான் இப்போது பேசுகிறேன்” எனக் கூறிய அவர், “என் பெயரை யாரும் போடக்கூடாது. இனிஷியல் வேணும் என்றால் போட்டுக்கலாம், ஆனால் முழுப் பெயரை தவிர்க்க வேண்டும். என் பேச்சைக் கேட்காவிட்டால், அது என் தந்தையின் சொல் – மிகப் பெரிய மந்திரம் இல்லை!” என்று உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.
மேலும், “மக்களோடு மக்களாக வாழுங்கள், மக்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஊருக்கு ஊரா சென்று கேட்டுப் பாருங்கள். செயல் தலைவர் என்றால், செயலில் இருப்பவராக இருக்க வேண்டும்” என அவர் அறிவுறுத்தினார்.
பாமக நிறுவனர் ராமதாசுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகை தந்துள்ளார். அவர் தனது தாயார் சரஸ்வதியை பார்ப்பதற்காக வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.