நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மொழி வழியே பிரிக்கப்பட்ட மாநிலங்களில் சமஸ்கிருதத்திற்கு பிரிக்கப்பட்ட மாநிலம் எத்தனை? ஒன்றும் இல்லை. சரியா அந்த கணக்கு தெரியல. 24 ஆயிரத்து 714 பேரோ…  இவ்வளவு தான் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் என்று அவர்களே வெளியிடுகிறார்கள். ஆனால் தமிழ் மொழியைப் பற்றி பேசுகிற பிரதமர்,

பாரதிய ஜனதா கட்சி,  புதிதாக கட்டிய பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் கல்வெட்டு… இந்தியில் கல்வெட்டு… சமஸ்கிருதத்தில் கல்வெட்டு… ஏன் என் தாய் மொழிக்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்கல ? ஊர் ஊரா போய் முதல் மொழி தமிழ். மூத்த மொழி தமிழ். சரிப்பா..  என் தாய் மொழியில் ஒரு கல்வெட்டை  வச்சிருக்கலாம் இல்ல. நீ தமிழை போற்றுவதா இருந்தா ? என்ன மறந்து விட்டுவிடுவேன் என்று நினைக்கிறீர்களா ?

ஐயா மோடி ஐயா ஏதோ ராமேஸ்வரத்தில் போட்டியிடுறாராம் … நான் இதுவரை பாராளுமன்றத்தில் போட்டியிட்டதில்லை,  போட்டியிடுகின்ற எண்ணமும் இல்லை.  அந்த மாதிரி ஒன்னு நடந்தால். அதுக்கப்புறம் என்ன நடக்கும்னு நீங்க பொறுத்து இருந்து பார்க்கணும்.

இவர்கள் நம்மளை ஏமாற்றுவார்கள். கோழிக்கு இறை போடுறவன் வந்து பக் பக் பக் பக் அப்படி போடுவான். அந்த கோழி நம்ம மொழியில் பேசுறான். நம்ம ஆளு போல இருக்குடா… அப்படின்னு அந்த கோழி நினைக்கும் அடுத்த நொடி சட்டில வெந்துகிட்டு இருக்கும்.  இவங்க நம்ம தாய் மொழியில் பேசுவது நம்மள காலி பண்ணத்தான். இத நல்லா கவனிச்சுக்கணும் என தெரிவித்தார்.