இன்றைய காலகட்டத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்களுடைய வீடுகளில் ஏசியை பயன்படுத்துகிறார்கள். இரவு முழுவதும் ஏசியை ஆன் செய்தவாறு தூங்குவதால் மின்சார கட்டணம் அதிகமாக வருகிறது. இந்நிலையில் ஏசியை பயன்படுத்தும் போது மின்சார கட்டணத்தை எப்படி சேமிக்கலாம் என்பது குறித்த சில வழிமுறைகளை இங்கு பார்க்கலாம். ‌ ஏசியை குறைந்த வெப்ப நிலையில் வைத்திருக்கக் கூடாது. மனிதனின் உடலுக்கு உகந்த் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி.

எனவே ஏசியை 24 டிகிரி வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது. கோடை காலத்துக்கு முந்தைய குளிர்காலத்தில் நீங்கள் ஏசியை பயன்படுத்தாமல் வைத்திருக்கலாம். அப்படியே பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதில் தூசி மற்றும் துகள்கள் சேர்ந்திருக்கும். அந்த நேரத்தில் குளிர்ச்சியை தருவதற்கு மெஷின் நிறைய நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கும். எனவே ஏசியை ஒருமுறை சர்வீஸ் செய்வது நல்லது. ஏசியை ஆன் செய்வதற்கு முன்பாக அந்த அறையின் கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை மூடிவிட வேண்டும். ஒருவேளை மூடாவிட்டால் குளிர்ச்சியை தருவதற்கு ஏசி அதிகமாக செயல்பட வேண்டி இருக்கும்.

இதனால் கரண்ட் பில் அதிகரிக்கலாம். எனவே ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு ஏசியை ஆன் செய்ய வேண்டும். தற்போது பெரும்பாலான ஏசிகள் ஸ்லீப் மோடு அம்சத்தில் வருவதால் அவை தானாகவே ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை சரி செய்து கொள்ளும். இதனால் 36 சதவீதம் வரை கரண்ட் பில் மிச்சமாகும். நீங்கள் ஏசியுடன் சேர்ந்து மின்விசிறியை பயன்படுத்தினால் ஏசி காற்றை மின்விசிறி அறையின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டு செல்லும். இதனால் ஏசியின் வெப்பநிலையை குறைக்க வேண்டியது ஏற்படாமல் மின்சாரம் மிச்சமாகும்.