ஏப்ரல் 25 கிரிகோரியன் ஆண்டின் 115 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 116 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 250 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

775 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிரான ஆர்மேனியர்களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு காக்கேசியாவில் இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் பைசாந்தியத்திற்கு தப்பி ஓடினர்.

799 – உரோமை மக்களால் மிக மோசமாக நடத்தப்பட்ட திருத்தந்தை மூன்றாம் லியோ, பாதுகாப்புத் தேடி பிரான்சியா சென்ரார்.

1607 – எண்பதாண்டுப் போர்: சிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் எசுப்பானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர்.

1644 – மிங் சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென், உழவர் கிளர்ச்சியை அடுத்துத் தற்கொலை செய்து கொண்டார்.

1707 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: பிரித்தானிய, இடச்சு, போர்த்துக்கல் கூட்டுப் படைகள் பிராங்கு-எசுப்பானிய வீரர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

1792 – கில்லட்டின் மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது.

1804 – மேற்கு ஜோர்ஜியாவின் இமெரெட்டி இராச்சியம் உருசியப் பேரரசின் மேலாட்சியை ஏற்றுக் கொண்டது.

1829 – சார்ல்ஸ் பிரெமாண்டில் மேற்கு அவுஸ்திரேலியாவில் சலேஞ்சர் என்ற கப்பலில் தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

1846 – டெக்சசு எல்லை தொடர்பான பிரச்சினை மெக்சிக்கோ-அமெரிக்கப் போருக்கு வழிவகுத்தது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தன.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர்.

1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.

1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர்த்தொடர் ஆரம்பமானது. ஆத்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டன.

1916 – அன்சாக் நாள் முதல் தடவையாக நினைவு கூரப்பட்டது.

1945 – ஐக்கிய நாடுகள் அவையை நிறுவுவதற்கான ஆலோசனைகள் சான் பிரான்சிஸ்கோவில் 50 நாடுகளின் பங்களிப்போடு ஆரம்பமாயின.

1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனிய ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. பெனிட்டோ முசோலினி கைது செய்யப்பட்டார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: கடைசி நாட்சிப் படையினர் பின்லாந்தில் இருந்து விலகினர்.

1951 – கொரியப் போர்: காப்பியாங் நகரில் ஐநா படைகளுடன் நடந்த பெரும் மோதலை அடுத்து, சீனப் படைகள் விலகின.

1953 – பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் டூயி வாட்சன் ஆகியோர் டி. என். ஏ.யின் இரட்டை வட அமைப்பை வெளியிட்டனர்.

1954 – முதலாவது செயல்முறை சூரிய மின்கலம் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

1961 – ராபர்ட் நாய்சு தொகுசுற்றுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1974 – போர்த்துகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.

1981 – சப்பானின் சுருகா அணுமின் நிலையத்தில் நூற்றிற்கும் அதிகமான தொழிலாளர்கள் கதிர்வீச்சுத் தாக்கத்திற்கு உள்ளாயினர்.

1982 – காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இசுரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது.

1983 – பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.

1986 – எசுவாத்தினியின் மன்னராக மூன்றாம் முசுவாத்தி முடிசூடினார்.

1988 – இரண்டாம் உலகப் போரில் இழைத்த போர்க்குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இசுரேல் மரண தண்டனை விதித்தது.

2005 – இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எத்தியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

2005 – பல்காரியா, உருமேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

2006 – கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொடைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.

2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1599 – ஆலிவர் கிராம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (இ. 1658)

1874 – மார்க்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1937)

1906 – புதுமைப்பித்தன், தமிழக எழுத்தாளர் (இ. 1948)

1911 – எஸ். வி. வெங்கட்ராமன், தமிழக திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1998)

1912 – மு. வரதராசன், தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர், கல்வியாளர் (இ. 1974)

1918 – ஜெரார்டு தெ வவுகவுலியூர்சு, பிரான்சிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1995)

1923 – பிரான்சிசு கிரகாம் சுமித், ஆங்கிலேய வானியலாளர்

1932 – நிக்கொலாய் கர்தசோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 2019)

1935 – எட்வின் பீபுள்சு, கனடிய-அமெரிக்க இயற்பியலாள6, அண்டவியலாளர்

1935 – செல்லையா பொன்னத்துரை, இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (இ. 2013)

1940 – அல் பசீனோ, அமெரிக்க நடிகர், இயக்குநர்

1943 – தேவிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2002)

1947 – யோகன் கிரையொஃப், டச்சு கால்பந்து வீரர் (இ. 2016)

1949 – டொமினிக் ஸ்ட்ராஸ்-கான், பிரான்சிய பொருளியலாளர், அரசியல்வாதி

இன்றைய தின இறப்புகள்

1744 – ஆன்டர்சு செல்சியசு, சுவீடன் வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1701)

1960 – அமனுல்லாகான், ஆப்கானித்தான் அரசுத்தலைவர் (பி. 1892)

1961 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1896)

1968 – படே குலாம் அலி கான், இந்துத்தானி செவ்விசை பாடகர் (பி. 1902)

1989 – வ. சுப. மாணிக்கம், தமிழகத் தமிழறிஞர் (பி. 1917)

1999 – வில்லியம் அண்டர் மெக்கிரியா, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1904)

2003 – பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை, இலங்கை கத்தோலிக்க ஆயர் (பி. 1917)

2005 – இரங்கநாதானந்தர், இந்திய மதகுரு (பி. 1908)

2018 – எம். எஸ். ராஜேஸ்வரி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1931)

இன்றைய தின சிறப்பு நாள்

உலக மலேரியா நாள்

அன்சாக் நாள் (ஆத்திரேலியா, நியூசிலாந்து)

மர நாள் (செருமனி)

டிஎன்ஏ நாள்

விடுதலை நாள் (இத்தாலி)

விடுதலை நாள் (போர்த்துகல்)