தமிழகத்தில் ரேஷன் கார்டுகளைக் கொண்டு ஏழை மக்கள் அரிசி மற்றும் பருப்பு போன்ற பல அத்தியாவசியமான பொருள்கள் நியாய விலையில் வாங்குகின்றனர். அதோடு அரசின் பல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. இதனால் ரேஷன் கார்டுகள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அத்தகைய ரேஷன் கார்டுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை திருத்துவது குறித்து காணலாம்.

முதலில் உங்கள் ஊரில் உள்ள தாசில்தார் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு திருத்த படிவத்தை வாங்கி, எந்த விவரத்தை மாற்ற வேண்டுமோ அதை நிரப்பவும். அந்த விபரங்களை நிரப்பி விட்டு, அத்துடன் அடையாளச் சான்று, முகவரி சான்று அல்லது பெயர் மாற்றத்தை குறிக்கும் ஆவணங்களை இணைக்கவும். அதன் பிறகு அதனை உரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும், அதனை உரிய அதிகாரிகள் சரிபார்த்ததும் ரேஷன் கார்டு திருத்தப்பட்டு புதுப்பிக்கப்படும்.