இப்போதைய காலகட்டத்தில், பலர் சவாலான செய்கைகளில் ஈடுபடுவதும், அதில் உள்ள ஆபத்துகளை உணராமல், அத்தகைய நிகழ்வுகளைச் செய்ய முன்வருவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காட்சியில், ஒரு நபர் தனது செல்லப்பிராணியான நாயுடன் ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்கிறார். இந்த முயற்சி அவரது உயிரையும், அந்த நாயின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

நீல நிற டீஷர்ட் அணிந்த அந்த நபர் ஓடும் ரயிலில் நாயைத் பிடித்துக்கொண்டே ஏற முயற்சி செய்தார். பயங்கரமான அந்த தருணத்தில், நாய் திடீரென ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியில் கடும் பதட்டத்தில் சிக்கினர். அச்சத்தில் அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக பாதையில் இறங்கி நாயை தேட முயற்சிக்கின்றனர். சிலர் ரயிலை நிறுத்த முயற்சிக்க, மற்றவர்கள் அந்த நபரை கண்டித்துள்ளனர்.

 

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் விரைவில் வைரலாக பரவ, பலரும் அந்த நாயின் நிலையைப் பற்றிய கவலையுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த நபரின் செய்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.