தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் படித்த பள்ளியின் புகைப்படம் மற்றும் பள்ளி பருவ புகைப்படம் போன்றவைகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் நடிகர் விஜய் எந்த பள்ளியில் படித்தார் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். நடிகர் விஜய் சென்னையில் உள்ள பாலோக் பள்ளியில் படித்தார். மேலும் நடிகர் விஜயின் பள்ளிப்பருவ புகைப்படங்களை அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.