
இன்றைய காலகட்டத்தில் நாம் தொலைபேசி, மின்னஞ்சல், இணையம், சமூக வலைதளம் என நவீன தொழில்நுட்ப உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். பேஸ்புக், டுவிட்டர், whatsapp என விரல் நுனியில் தகவல்கள் பகிரப்பட்டாலும் விரலால் கடிதம் எழுதி தபால் பெட்டிகளில் அனுப்பிய காலத்தை நம்மால் மறக்கவே முடியாது. என்றைக்கும் அந்த தபால் நிலையம் மக்கள் சேவையாற்றி வருகிறது. ஸ்காட்லாந்தில் 1712ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தபால் நிலையம்தான் உலகின் மொத்த தபால் நிலையங்களுக்கும் தாய் வீடாகும். இன்றைக்கு உலகம் முழுவதும் 8 லட்சத்துக்கு அதிகமான தபால் நிலையங்கள் இருக்கின்றன.
உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. கிட்டத்தட்ட 1.5 லட்சம் தபால் நிலையங்கள் இந்தியாவில் இயங்குகிறது. 1874 ஆம் வருடம் அக்டோபர் ஒன்பதாம் தேதி சர்வதேச தபால் நிலையம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1969 ஆம் வருடம் அக்டோபர் ஒன்பதாம் தேதி உலக அஞ்சல் தினம் அறிவிக்கப்பட்டது. விக்டோரியா மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது தபால் முத்திரை 1857 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.