தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் கமிட்டான நிலையில் கதையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். இதனால் விரக்தியில் இருக்கும் விக்னேஷ் சிவன் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இதற்காக விஜய் சேதுபதியிடம் விக்னேஷ் சிவன் கதை சொன்னதாகவும் அவரும் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோமாளி மற்றும் லவ் டுடே போன்ற படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் படத்தின் பட்ஜெட் 45 கோடியாம். இரட்டை ஹீரோ கொண்ட படத்தின் கதையை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளதால் ஒரு ஹீரோவாக பிரதீப் ரங்கநாதனும் மற்றொரு ஹீரோவாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அபிஷேக் பச்சனை சந்தித்து கதை கூறுவதற்காக தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் மும்பையில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.