சில ஆப்களை தனது செல்போன்களில் இன்ஸ்டால் செய்வதன் மூலம், ஹேக்கர்கள் நமது தகவல்களை ஹேக் செய்கின்றனர். அந்த வகையில் டெக் டாக் ஆப் என்பது தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புகள் பற்றிய இலவச கருவியாகும். இதனை தங்களது செல்போன்களில் இன்ஸ்டால் செய்வது மூலம், தனது காதலன் அல்லது கணவரின் செல்போன்களில் உள்ள தகவல்களை பார்க்க முடியும் என்று நிறைய ரீல்ஸ் இணையதளத்தில் வருகின்றது.

இது போன்ற ஆப்களை இன்ஸ்டால் செய்வது சட்டப்படி குற்றமாகும். அதோடு பாதுகாப்பற்ற இதுபோன்ற ஆப்களை பயன்படுத்தும் நபரது செல்போன் அவருக்கு தெரியாமலேயே ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.